

சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற்று வரும் வர்த்தகக் கண்காட்சியை காண சென்ற நான்கு இந்தியர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சீனாவின் ஷங்காய் நகரில் மிதிவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் வர்த்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.இக்கண்காட்சிக்கு இந்தியாவிலிருந்து வர்த்தகக் குழுவினர் சென்றிருந்தனர். இந்நிலையில் ஷங்காய் நகரில் உள்ள தங்கும் விடுதியில் அவர்களை சீன பொலிஸார் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இந்தியத் தூதரக அதிகாரிகள் சீன பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி கைதான நபர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கு முன்பு, கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற வைர கண்காட்சியின் போது வைரக்கடத்தலில் ஈடுபட்டதாக 23 இந்தியர்களை சீனா கைது செய்தது. அவர்களில் 13 பேர்களை மட்டும் விடுதலை செய்த சீனா, மற்ற 10 பேர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் தற்போது நான்கு இந்தியர்கள் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.