ஐக்கிய ரஷ்ய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி, விளாடிமிர் புடின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அடுத்த மாதம் 7ம் திகதி ஜனாதிபதி பொறுப்பை ஏற்க உள்ளார்.இதனையடுத்து தற்போதைய ஜனாதிபதி மெத்வடேவுக்கு, ஐக்கிய ரஷ்ய கட்சியின் தலைவர் பதவியை அளிக்க உள்ளார் புடின். கட்சியின் தற்காலிக தலைவராக உள்ள திமித்ரி அனடோலிஎவிச் ரஷ்ய பிரதமர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
இதுகுறித்து புடின் கூறுகையில், கட்சி சார்பற்றவராக ஜனாதிபதி இருக்க வேண்டியது அவசியம். எனினும் இதை அரசியல் சட்டம் தடுக்கவில்லை. எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டியுள்ளதால் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன் என்று தெரிவித்தார்.