
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்
சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்
பெண்களுக்காக
Olympics போட்டிகளுக்காக லண்டனில் மிகபெரிய McDonalds!



அமெரிக்க ஃபாஸ்ட் ஃபூட் செயின் McDonalds-க்கும், ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? McDonalds, தமது உலகின் மிகப்பெரிய ரெஸ்ட்டாரன்டை லண்டனில், ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக திறக்கப் போகின்றது. இது இப்போதைய தொடர்பு. இவர்களுக்கு இடையே 1960களின் இறுதியில் இருந்தே தொடர்பு உள்ளது.
1968-ம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸின் Grenoble நகரில் நடந்தது. அதில் கலந்துகொண்ட அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கு பிரெஞ்ச் உணவு சரிப்பட்டு வரவில்லை.ஒலிம்பிக்ஸ் வில்லேஜ் குடியிருப்பில் அமெரிக்க உணவு என்று தயாரித்து கொடுக்கப்பட்ட உணவை, விசித்திர ஜந்துவைப் பார்ப்பதுபோல பார்த்தார்கள் அமெரிக்க விளையாட்டு வீரர்கள். இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியாகியதில், அமெரிக்காவில் பரபரப்பு. உடனே களத்தில் இறங்கிய McDonalds, தமது சொந்த தயாரிப்பு ஹம்பர்கர்களை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தது.

இது அந்த நாட்கனில், McDonalds நிறுவனத்துக்கு அட்டகாசமான விளம்பரத்தை தேடித் தந்ததுடன், அமெரிக்க உணவு என்றாலே McDonalds ஹம்பர்கர் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியது.1976-ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மொன்ட்ரியோலில் (கனடா) நடந்தபோது, முதல் தடவையாக ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அதிகாரபூர்வ ஸ்பான்ஸர் ஆகியது McDonalds. 1984-ல், லாஸ் ஏஞ்சலஸில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்ற போது, நீச்சல் போட்டிகளுக்கான ஸ்விம்மிங் ஸ்டேடியத்தை முழுமையாக கட்டிக் கொடுத்ததும் McDonalds நிறுவனம்தான்.
ஹம்பர்கர் விற்ற காசில் இவ்வளவையும் செய்த அவர்கள், 2012 ஒலிம்பிக்ஸில் ஹம்பர்கர் விற்பதற்காக தமது மிகப்பெரிய உணவகத்தை அமைக்கிறார்கள். 2012 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறும்போது மட்டுமே இயங்கவுள்ள தற்காலிக உணவகம் இது. மொத்தம் 6 வாரங்கள் திறந்திருக்கும். 1,500 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு உண்ணும் அளவுக்கு இடவசதியுடன், இரண்டு தளங்களில் உருவாகிறது இந்த ரெஸ்ட்டாரன்ட். 2,000 பேர் பணிபுரிவார்கள். கிழக்கு லண்டனின் ஸ்ட்ரட்ஃபோர்ட்டில், ரெஸ்ட்ராரன்ட் அமைக்கும் வேலைகள் முழுமூச்சில் நடைபெறுகின்றன.
லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகள், McDonalds நிறுவனம் official restaurant என்ற வகையில் செயற்படும் 9-வது ஒலிம்பிக்ஸ் தொடர். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில், விளையாட்டு வீரர்களுக்கு உணவு வழங்கவுள்ள ஒரேயொரு பிரான்டட் ஃபூட் செயினும் இவர்கள்தான்! லண்டனில், ஜூலை 27-ம் தேதி முதல், செப்டெம்பர் 9-ம் தேதிவரை நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ள வரும் விளையாட்டு வீரர்கள், பிளஸ் பொதுமக்களுமாக, 3 மில்லியன் பேர் McDonalds உணவகத்தில் ஒரு நேரமாவது உணவு உண்ண வருவார்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
2,000 பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக செய்யப்பட்ட விளம்பரத்துக்கு 12,912 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் கொஞ்சம் தற்பெருமைக்காரர்கள். அதனால், McDonalds அமெரிக்க ஃபூட் செயினாக இருந்தாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் 17,500 பிரிட்டிஷ், மற்றும் ஐரிஷ் பண்ணைகளில் இருந்தே பெறப்படும் என்று விளம்பரம் செய்கிறார்கள்.அவர்களுக்கு சந்தோஷம், இவர்களுக்கு லாபம். பிய்ஜிங்கில் (சீனா) 2008 ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜெயதித்த உலகின் வேகமான மனிதன் யார் என்று தெரியுமா? Usain Bolt. ஜமேக்கா நாட்டு விளையாட்டு வீரர். அவர் ஒரு பேட்டியில் தெரிவித்த விஷயம், McDonalds தயாரித்து விற்கும் சிக்கன் மக்நகெட்ஸ் (Chicken McNuggets) தான் எனது வெற்றியின் ரகசியம்.
அவர் நிஜமாகவே McNuggets சாப்பிட்டுவிட்டு போட்டியில் கலந்து கொண்டாரா தெரியாது. ஆனால், McDonalds லண்டனில் உருவாக்கும் மெகா உணவகத்தில், தினமும் 75,000 McNuggets தயாரிக்க வசதிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். (அத்துடன், 50,000 Big Mac burgers, 180,000 portions of fries வரை தயாரிக்க வசதிகள் உண்டு)


மேலும் சில...
