

பாகிஸ்தானில் முன்னணி பத்திரிகையின் மூத்த ஆசிரியர் மர்மான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானின் முன்னணி பத்தரிகையான ‘டான் ’ நாளிதழின் சீனியர் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முர்டாஸ் ரஸ்வி. இவர் கராச்சி நகரில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். நேற்று இரவு தனது குடியிருப்பு பகுதியின் அப்பார்மெண்டில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.பொலிசார் அவரது உடலை கைப்பற்றினர்.
அப்போது அவரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டும், உடலில் பல இடங்களில் ரத்தகாயங்களும் இருந்ததால். அவர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பத்திரிகை துறையில் 20 ஆண்டு காலம் பணியாற்றி வந்த ரஸ்வி, டான் பத்திரிகையின் லாகூர் பிரிவு பதிப்பகத்தின் மூத்த ஆசிரியராக பணியாற்றி வந்தார். கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரிக்கின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் ஐந்து பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும், அதேபால் ஐந்தாண்டுகளில் 29-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
