

கொலிவுட் நட்சத்திர நாயகன் கார்த்தி, தன்னுடைய மனைவியை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.திருமணத்திற்கு பின்பு நாயகன் கார்த்தி சகுனி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அரசியல் வாதியாக வருகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.தற்போது நாயகன் கார்த்தி சுராஜ் இயக்கத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கார்த்தியுடன் மூன்று நாயகிகள் இணைகின்றனர். நாயகி அனுஷ்கா, ரேணிகுண்டா சனுஷா, நிகிதா ஆகியோர் நடிக்கின்றனர்.இந்நிலையில் தன்னைச்சுற்றி வதந்திகள் எதுவும் பரவாமல் இருக்க நாயகன் கார்த்தி, தன்னுடைய மனைவி ரஞ்சனாவை படப்பிடிப்பிற்கு கூடவே அழைத்துச் செல்கிறார்.
இதுகுறித்து நாயகன் கார்த்தி கூறியதாவது, எப்பொழுதும் மனைவியுடன் இருக்கும் படி புதிய திட்டத்தை வைத்துள்ளேன். படப்பிடிப்பிற்கு எங்கு சென்றாலும் மனைவியையும் அழைத்துச் செல்கிறேன்.சகுனி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு போலாந்தில் நடைபெற்ற போது கடும் குளிர் காரணமாக மனைவியை அழைத்துச் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.