

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தன்னை நீக்கியருப்பதாக புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பொலிஸ் கொமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.தாணு, தேனப்பன் ஆகியோர் பொலிஸ் கொமிஷனர் திரிபாதியை நேற்று சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணனையும் சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த அவர்கள், ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.ஊடக நிருபர்களிடம் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது: நாங்கள் அனைவரும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்கள்.
எங்கள் சங்கத்தில் 750 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நான் 320 வாக்குகள் பெற்று தலைவராக தெரிவுசெய்யப்பட்டவன்.எங்களை நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது விளையாட்டு அல்ல. 15 திகதிகளுக்கு முன்பு நோட்டீசு கொடுத்து தான் யாரையும் நீக்க முடியும்.
சங்கத்தின் செயற்பாடுகள் நடக்க வேண்டும். அது குறித்து கொமிஷனரிடம் பேசினோம். நாங்கள் பாதுகாப்பு கேட்கவில்லை.எங்களுக்குள் பகை இல்லை. எங்கள் பிரச்சினையை கோர்ட்டு தீர்த்து வைக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
