

இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய வளரும் நாடுகள் இணைந்து பிரிக்ஸ் எனும் அமைப்பை உருவாகியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. அதில் இந்த அமைப்புக்கென ஒரு வங்கியை உருவாக்க தீர்மானித்தனர்.உலக வங்கி மற்றும் இன்டர்நேஷனல் மானிடரிங் பண்ட் ஆகிய இரு உலக வங்கி அமைப்புகளும் இதற்கு இசைவு தரும் எனவும், பிரிக்ஸ் நாடுகளும் புதிய வங்கி உருவாவதற்கான திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பிரிக்ஸ் அமைப்பின் நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில்: புதிதாக உருவாக்கப்படும் வங்கி நிர்வாகத்தில் அனைத்து நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களும் நிபுணர்களும் பங்கு பெறுகிறார்கள் எனவும், இந்நிபுணர்கள் குழு விரைவில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இதற்கு முந்தைய பிரிக்ஸ் மாநாடுகளை காட்டிலும் தற்போது நடைபெற்ற மாநாட்டில் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களுக்கென்று தனி வங்கி உருவாக ஆர்வம் காட்டுகின்றன. தான் உலக வங்கி மற்றும் இன்டர்நேஷனல் மானிடரிங் பண்ட் அதிகாரிகளுடன் பேசியதாகவும் அவர்களிடம் இருந்து சாதகமான தகவல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில் இன்றைய பொருளாதார சந்தை மிகப்பெரியது. புதிய வங்கி உருவாவதினால், அது எந்தவொரு வங்கியையும் பாதிக்காது. இப்புதிய வங்கி தொடங்குவதற்கு போதுமான இடைவெளி இருப்பதாகவும் தெரிவித்தார்.
