

ஜப்பானிய அரசு அதன் ஒகினவா கடற்பரப்பில் குடி கொண்டிருந்த அமெரிக்காவின் 9000 யுத்தக்கப்பல்களை குவாம் தீவு மற்றும் ஆசிய பசுபிக் வலயத்திற்கு நகர்த்துவதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.இது பற்றி டோக்கியோவில் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் கொய்ச்சிரோ கெம்பா இது ஒரு முன்னேற்றகரமான சாதனை எனக் கூறியுள்ளார்.
இதேவேளை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நவோகி டனாகா கருத்துரைக்கையில் இந்த ஒப்பந்தம் குறித்த வலயத்தில் அமெரிக்கப் படையினரால் வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டு வந்த குற்றங்களை தடுத்து நிறுத்துவதுடன் அமைதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை உறுதிப் படுத்தும் எனக் கூறியுள்ளார்.
ஜப்பானிய பிரதமர் நோடா இராஜ தந்திர நகர்வுகளை மேற்கொள்வதற்காக வாஷிங்டனுக்குச் சென்று வந்த சில நாட்களுக்குள் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விரு தரப்பும் ஒகினவாவில் உள்ள ஃபுதென்மா இராணுவ தளத்தை மாற்றுவது தொடர்பாகவும் சம்மதித்துள்ளன.