

கண் முன்னால் கிடக்கும் காலண்டரில் திகதி, நாள் பார்ப்பதில் கூட குழப்பம் ஏற்படும். சில விநாடி யோசனைக்கு பின்புதான் சரியான முடிவுக்கு வர முடிகிறது.ஆனால் 2030-ம் ஆண்டில் ஒரு மாதத்தையும், திகதியையும் சொன்னால் கிழமையை துல்லியமாக சொல்கிறான் 10 வயது சிறுவன். அதெப்படி...? என்று யோசிக்கிறீர்களா? அவனுடைய அற்புத ஆற்றலை பார்த்து எல்லோருமே அதிசயித்து போகிறார்கள்.
ஸ்ரீராம் பாலாஜி இவன் தான் அந்த அதிசய சிறுவன். அடையாறு ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். படிப்பில் படுசுட்டி என்று சொல்ல முடியாதவர். வகுப்பில் அமைதியானவன், கடுமையான உழைப்பாளி. இதுதான் அவனைப் பற்றி ஆசிரியை லதா கூறும் சுருக்கமான தகவல்.
இத்தகைய ஆற்றலைப் பற்றி ஆசிரியர் லதா கூறுகையில், வகுப்பில் ஒருநாள் வியாழக்கிழமை என்ன திகதி என்று பார் என்றேன். ஆனால் அவன் காலண்டரை பார்க்காமலேயே திகதியை சொன்னான். இந்த வருடத்தில் எத்தனை வியாழக்கிழமை என்றேன். அதற்கும் சளைக்காமல் பதில் சொன்னான்.உடனே அவனது பெற்றோரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, எப்போதும் செல்போனில் காலண்டர் பார்ப்பான் அவ்வளவு தான் என்றார்கள்.
மேலும் அவனது ஆற்றலை சோதிப்பதற்காக நாங்கள் பல ஆண்டு காலண்டரை இன்டர்நெட்டில் படியிறக்கம் செய்து வைத்துக் கொண்டு, அவனிடம் ஏதாவது ஒரு ஆண்டு, மாதம் திகதியை கூறி கிழமையை கேட்ட போது அதற்கும் சரியான பதிலையே அளித்துள்ளான் இச்சிறுவன்.
