மசாலா காபி திரைப்படத்தில் களவாணி நாயகன் விமல், பாடல் ஒன்று பாடி அசத்தியுள்ளார்.கொலிவுட்டில் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விமல், இன்று வளர்ந்து வரும் நாயகர்களும் ஒருவர் ஆவார்.விமல் நடித்த களவாணி, தூங்கா நகரம், வாகை சூட வா போன்ற படங்களை வெற்றியை தேடித் தந்தது.
தற்போது மசாலா காபி, இஷ்டம், சில்லுன்னு ஒரு சந்திப்பு, ரெண்டாவது படம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இதில் சுந்தர்.சி இயக்கத்தில் மசாலா காபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.மசாலா காபி படத்திற்காக நாயகன் விமல், பாடல் ஒன்று பாடி அசத்தியுள்ளார். இத்திரைப்படத்திற்கு விஜய் எபினேஷர் இசையமைக்கிறார்.
முன்னணி நடிகர்கள் என்றால் அனைத்து விடயங்களிலும் முக்கியமாக, பாடல் பாடி வெற்றிபெறச் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில் தற்போது நாயகன் விமலும் இணைந்துள்ளார்.