மலை ஏறுவது என்பது மிகவும் கடினமான விடயமாகும்.ஏனென்றால் மலைகள் செங்குத்தாக காணப்படுவதும், பிடித்து ஏறுவதற்குரிய ஆதாரங்கள் அரிதாக இருப்பதுவும் இதற்கு காரணமாகும்.இருந்தும் ஸ்காட்லாந்தை சேர்ந்த 33 வயதான டேவ் மக்லியோட் என்பவர் தனது கைகளையும், கால்களையும் பயன்படுத்தி 10 மணித்தியாலங்களில் 1128 அடிகள் ஏறி அசத்தியுள்ளார்.
இதற்காக லண்டனின் கடற்கரை ஒன்றில் அமைந்துள்ள மலையை தேர்ந்தெடுத்த அவர் தற்பாதுகாப்பிற்காக கயிறு ஒன்றையும் கொண்டே சென்றுள்ளார்.இது பற்றி கருத்து தெரிவித்த அவர், 10 மணித்தியாலங்களில் 1,200 அடிகள் ஏறுவது என்பது மிகவும் கடினமான காரியம் எனவும், மலை உச்சியை அடையும் இறுதித் தருணத்தில் கடினம் மேலும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.