சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று 16 சிசுக்களின் உடல்களை நதிக்கரையில் புதைத்தது தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஷாண்டாங் மாகாணம் டேஷூ நகரில் ஆற்றை ஒட்டி குப்பை கூளமாக கிடந்த இடத்தில் அப்பகுதியினர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் இறந்த சிசுவின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 16 சிசு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.டேஷூ நகரின் மகப்பேறு மருத்துவமனை ஊழியர் ஒருவர் கடந்த மாதம் இவற்றை புதைத்தார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஆஸ்பத்திரியின் துணை தலைவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். சிசுக்களின் உடல்களை மருத்துவ கழிவு போல புதைத்தது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.