நாளுக்கு நாள் உண்டாகும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, உருவாக்கப்படும் இலத்திரனியற் பொருட்களின் பருமன் சிறிதாகிக் கொண்டே செல்கின்றது.இதன் அடிப்படையில் சில காலங்களுக்கு முன்பு பியானோ இசைப்பதற்குரிய கையுறை ஒன்றை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியிருந்தனர்.
தற்போது மணிக்கட்டுகளில் பியானோவை பொருத்தி அதனை விரல் நுனிகள் மூலம் இசைக்கும் அற்புத கண்டுபிடிப்பை நிகழ்த்தி ஜப்பானியர்கள் சாதித்துள்ளனர்.இந்த பியானோவில் மூன்று வகையான ஒலி நயங்கள் காணப்படுவதுடன் மிகவும் சிறியதாகவும், இலகுவானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன் பெறுமதி 39.99 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.