மனிதர்களை விட டொல்பின்கள் விபரமாக இருக்கின்றன என்கிற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.டொல்பின்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்த மற்றைய டொல்பின்களோடு சந்தித்துக் கொள்கையில் வணக்கம் தெரிவித்தும், விசில் அடித்தும் மிகவும் அழகாக தகவலைப் பரிமாறிக் கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.
ஸ்கொட்லாந்தின் வடகடல் பகுதியில் இருக்கும் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியல் துறை ஆராச்சியாளர்கள் தான் மேற்படி உண்மைகளை சில ஆண்டுகளாக தீவிரமாக ஆராய்ந்து கண்டு பிடித்துள்ளனர். டொல்பின் கூட்டத்துக்கும் ஒரு தலைவர் இருக்கின்றார்.
சந்தித்துக் கொள்வதற்கும், எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவும், உணவு தேடவும் இவை விசில் அடித்துக் கொள்வதாக ஆய்வில் சுவாரஷ்யமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.