

இந்திய அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய, புதிய நிறுவனத்தை தேர்வு செய்வது குறித்து, ஆலோசிக்க பி.சி.சி.ஐ., மார்கெட்டிங் கமிட்டி கூடுகிறது. இந்திய அணி சொந்த மண்ணில் பங்கேற்கும் போட்டிகள், மட்டும் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட முதல் தர போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை நிம்பஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இதன்படி இந்தியா பங்கேற்கும் போட்டி ஒன்றுக்கு ரூ. 31.5 கோடி செலுத்தி வந்தது.
சரியான நேரத்தில் சரியாக பணம் செலுத்தாததால், நிம்பஸ் உரிமை கடந்த டிசம்பருடன் முடிந்தது. இதனிடையே வரும் 2013 ஜனவரி வரை, இந்திய அணி தனது சொந்த மண்ணில், நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் (வரும் ஆகஸ்ட்-செப்.,), இங்கிலாந்துடன் நான்கு டெஸ்ட், 7 ஒருநாள் போட்டி, ஒரு "டுவென்டி-20', தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு டெஸ்ட் (2013, பிப்.,-மார்ச்) போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இதற்கான "டிவி' நேரடி ஒளிபரப்பு, இணைதள உரிமை குறித்து, ஏலம் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) மார்கெட்டிங் கமிட்டி வரும் மார்ச் 7ல் கூடுகிறது.