தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ-சவுத் வேல்ஸ் பகுதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இதுவரை 9000ற்கும் மேற்பட்டோர் தமது வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.நேற்று பெய்த கடும் மழையினால் அப்பகுதியின் முரும்பிட்கீ நதி (Murumbidgee River) பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது.
ஆற்று நீர் நகர்ப்பகுதிக்குள் புகுந்ததால், ஏற்பட்ட இவ்வெள்ளப்பெருக்கினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குயின்ஸ்லாந்து, விக்டோரியா பகுதிகளும், இவ்வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ளன. 1844ம் ஆண்டுக்கு பிறகு இப்பகுதியில், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதுவே முதற்தடவை.
வெள்ளப்பெருக்கின் பாதிப்புக்களையும், உயிர்ச்சேதங்களையும் கட்டுப்படுத்தும் விதத்தில் இராணுவத்தினர், அவசர சேவை அதிகாரிகள் உட்பட பலர் வெள்ள அனர்த்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.