கொலிவுட்டில் தனுஷ், ஸ்ருதி நடித்த “3” திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.திரையுலகில் ஐஸ்வர்யா தனுஷ் முதன் முறையாக தன் கணவரை வைத்து “3” படத்தை இயக்கியுள்ளார். தனுசுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இவர்களுடன் சிவகார்த்திகேயன், இளையதிலகம் பிரபு நடித்துள்ளனர்.
பள்ளிப்பருவத்தில் ஆரம்பிக்கும் காதலைப்பற்றி இயக்குனர் ஐஸ்வர்யா கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.“3” படத்தில் தனுஷ் பாடி அனிருத் இசையமைத்த கொலைவெறி டி பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்நிலையில் “3” படத்தின் முன்னோட்டக்காட்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.