

கார்த்தி படத்தில் நடிப்பதை விட நடிக்காமல் இருப்பதே மேல் என்று பிரபல நடிகையான லட்சுமி ராய் கூறியுள்ளார்.தாம் தூம், இரும்புகோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா என அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்த லட்சுமிராய்க்கு தற்போது சொல்லும் படியாக படங்கள் இல்லை. தற்போது அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவுக்கு வந்த சமயத்தில் வாய்ப்பு வந்த அனைத்து படங்களையும் ஒப்புக் கொண்டேன்.ஆனால் தற்போது எனது பாணியை மாற்றிக் கொண்டுள்ளேன். இனிமேல் படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன்.
சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் கதையை கேட்ட போது எனது கதாபாத்திரம் பிடிக்கவில்லை.இந்த படத்தில் நடிப்பதற்கு நடிக்காமல் இருப்பதே மேல் என்று நடிக்க மறுத்துவிட்டேன், அதே போன்று ஜீவா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதையும் மறுத்து விட்டேன்.
தற்போதைக்கு மலையாளத்தில் மூன்று படம், கன்னடத்தில் இரண்டு படம், தெலுங்கில் ஒரு படம் என மொத்தமாக 6 படங்களில் நடித்து வருகின்றேன்.நான் கடவுளையும், கடின உழைப்பையும் நம்புகின்றேன். எந்தவொரு பிரச்சனையும் சமாளிக்கும் திறமை என்னிடம் உண்டு. நல்ல படத்துக்காக காத்திருக்க தயாராகி விட்டேன் என்று கூறியுள்ளார்.
