

பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா அறிவித்த ரூ.5500 கோடி உதவியை அதிபர் ஒபாமா நிறுத்தினார். பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை பிடிக்கவும், தீவிரவாதிகளை அழிக்கவும் அந்த நாட்டு ராணுவத்துக்கு ரூ.5500 கோடி நிதி உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்து அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்கா- பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரூ.5500 கோடியை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான தீர்மானம் செனட் சபையில் நிறைவேறியது.
இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் ஹவாய் தீவில் தங்கி விடுமுறையை கழித்து வருகிறார்.மேலும் அமெரிக்க ராணுவத்துக்கு 2012-ம் ஆண்டிற்கான ரூ.33 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பரிந்துரையை ஏற்று அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். இந்த தகவல் அவர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.