இங்கிலாந்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 800க்கும் அதிகமான முறை போன் செய்து டோச்சர் செய்த டீன் ஏஜ் இளம்பெண் கைது செய்யப்பட்டார்.லண்டனை சேர்ந்தவர் கெர்ரி ஆன் மோதே(18).இவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஏதாவது பரபரப்பாக பேசி வந்துள்ளார்.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்றும், அதற்கடுத்த நாட்களிலும் கட்டுப்பாட்டு அறை எண் 999க்கு 756 முறை போன் செய்து ஏதேதோ தகவல் தெரிவித்துள்ளார்.அதற்கு முன் கடந்த டிசம்பர் 11ம் திகதியில் இருந்து 13ம் திகதிக்குள் 44 முறை போன் செய்து பேசியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த லண்டன் காவல்துறையினர் கெர்ரியை கைது செய்து ஹன்டிங்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது அடிக்கடி போன் செய்து தொந்தரவு கொடுத்ததை நீதிபதியிடம் கெர்ரி ஒப்புக் கொண்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறையினர் கூறினர்.