

நைஜீரியாவில் நிலத்தகராறு கலவரமாக வெடித்தில் 52 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், இபேனோஸ் மாகாணத்தில்ன் இஸ்ஷிஈலு என்ற மாவட்டத்தில், ஈஸ்ஸா மற்றும் ஈஸிலோ என்ற இரு பிரிவினர் உள்ளனர்.இவர்களிடையே ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.மேலும் இருபிரிவினருக்கும் யார் தலைவனாக வருவது என்பதில் கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து பிரச்சினை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.இதில் பெண்கள், குழந்தைகள் என 52 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.சம்பவ இடத்திற்கு கவர்னர் மார்டினன் இலிச்செயி பார்வையிட்டார்.
ஏற்கனவே ‘புகோ ஹாரம்’ என்ற பயங்கரவாத அமைப்பினர் கடந்த ஆண்டு (2011) கிறிஸ்துமஸ் தினத்தன்று சேச்சில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.இதில் 44 பேர் பலியாயினர். .தற்போது இருபிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தால் 52 பேர் பலியாகியுள்ளனர்.பலியானவர்களுக்கு அதிபர் குட்லக்ஜோனாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அங்கு மேலும் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையினை கட்டுப்படுத்தி வருகின்றனர்.