இந்தியில் ஹிட்டான 'டபாங்' படம் தமிழில் ஒஸ்தி பெயரில் ரீமேக் ஆனது.இப்படத்தை தெலுங்கிலும் 'கப்பார்சடிங்' என்ற பெயரில் எடுக்கின்றனர்.இதில் நாயகனாக பவன்கல்யாணும், நாயகியாக ஸ்ருதியும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் முடிந்துள்ளது.இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட பிரபல இந்தி நடிகை பிபாசாபாசுவை அணுகினர்.அவர் ரூ.1 கோடி கேட்டாராம். ஒரு பாட்டுக்கு ஆட ஒரு கோடியா? என வாய் பிளந்தார் தயாரிப்பாளர்.பிறகு ரூ.50 லட்சம் தருவதாக பேசியுள்ளார். இதற்கு பிபாசாபாசு சம்மதிக்கவில்லையாம்.
தமிழில் இந்த பாடலுக்கு மல்லிகா ஷெராவத் ஆடி இருந்தார். இந்தியில் மலேக்கா அரோரா ஆடினார். அவர்கள் வாங்கியதை விட பலமடங்கு அதிக சம்பளம் கேட்கிறார் பிபாசாபாசு.