Unlimited Music, Everywhere. Try Rdio for Free.
ooVoo LLC
பிரதான செய்திகள்
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்


























சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்



























பெண்களுக்காக

Rajapattai: Vikram-Deeksha; Watch Tamil Movie Online!

அனைவருக்கும் வணக்கம்! உங்கள் ஊரில் இடம்பெறும் சமய,கலாசார நிகழ்வுகள் மற்றும் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி- vettiinayam@hotmail.com, ஸ்கைப் முகவரி:- Vetti.Inayam
Banner


கலை படங்களையும் கமர்ஷியல் படங்களாக நடித்து ரசிகர்களை கவருவதில் வல்லவரான விக்ரம் முழுக்க முழுக்க கமர்ஷியலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "ராஜபாட்டை".சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவுடன் ஜிம்போயாக சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் விக்ரம் ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் முதியவரான கே.விஸ்வநாத்தை காபந்து செய்து தன் கூடவே தங்க வைத்து கொள்கிறர்.

விக்ரம்-தீக்ஷா சேத்தின் காதலுக்கு கலர்ஃபுல் டிப்ஸெல்லாம் தரும் கலக்கல் பெரியவரான கே.விஸ்வநாத் வாழ்க்கையில் அப்படி ஒரு சோகம்!  தன் மறைந்த மனைவி பெயரில் விஸ்வநாத் நடத்தி வரும் அனாதை சிறுவர்கள் ஆசிரமத்தை, தன் அரசியல் லாபத்திற்காக அடித்து பிடுங்குகிறார் அவரது மகன் அவினாஷ்! 


அதை அவரிடமிருந்து ஆட்டையை போடுகிறார் அரசியல் தலைவியும் நிலமோசடி ராணியுமான அக்கா ரங்கநாயகி எனும் சனா.அவருக்கு ஆதியும் அந்தமும் ஆதரவாக இருக்கிறார் வாப்பா எனும் பிரதீப் ராவத்.மகன் அவினாஷிடமிருந்து பெரியவர் கே.விஸ்வநாத்தை காக்கும் விக்ரம், அக்கா சனா, வாப்பா பிரதீப் இருவரிடமிருந்து அனாதை ஆசிரம நிலத்தை மீட்டு மீண்டும் விஸ்வநாத் விருப்பபடி அந்த இடத்தில் அனாதை சிறுவர் விடுதிக்கு அடிக்கோள் நாட்டுவது தான் "ராஜபாட்டை" படத்தின் மொத்த கதையும்!


விக்ரம் ஜிம்போயாக பெரிய ஹீரோவாகும் ஆசையில் கோலிவுட்டை ரவுண்ட் அடிப்பது வரை ஓ.கே. அதில் சி.பி.ஐ. ஆபிஸராக சீக்கிய ஆபிஸராக மாறி நிலமோசடி விவகாரத்தில் வாப்பாவை வதைப்பது எல்லாம் ரொம்பவே ஓவராகத் தெரிகிறது! இது மாதிரி படக்காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சிகளிலும் சேர்த்து 17 வேடங்களில் விக்ரம் வருவதெல்லாம் கதைக்கேற்ற காட்சிகளை பிடிக்காமல் இயக்குநருடன் சேர்ந்து விக்ரமும் கண்ணாமூச்சி காட்டியிருப்பதாகவே தோன்றுகிறது!


படத்தின் புதுமுகநாயகி தீக்ஷா சேத்திற்கே போதுமான சீன்கள் இல்லாத பட்சத்தில் க்ளைமாக்ஸ் முடிச்சு, ஸ்ரேயாவுடனும், ரீமா சென்னுடனும் விக்ரம் ஆடிப்பாடும் பாடல்காட்சி ஏதோ எடுத்து விட்டோம் காசை கொட்டி என வலிய திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. தீக்ஷாவின் நடிப்பை அடுத்த படத்தில் பார்த்துவிட்டு தான் விமர்சிக்க முடியும்! இதில் அவ்வளவு சின்னரோல் அம்மணிக்கு பாவம்! கே.விஸ்வநாத், தம்பி ராமையா, பிரதீப்ராவ், அவினாஷ், சனா, அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கின்றனர்!



யுவனின் பின்னணி இசையும் (பாடல்கள் அல்ல...) மதியின் ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்! வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை என யதார்த்தமான படங்களை எளிமையாகவும், இனிமையாகவும் இயக்கிய சுசீந்திரன், கமர்ஷியலாக இயக்கிய "நான் மகான் அல்ல" அளவிற்கு கூட ராஜபாட்டையில் கலக்காதது வருத்தமே! 



தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலமோசடி விவகார வழக்குகளை விளையாட்டாக படமாக்கி இருக்கிறார்கள்! இன்னும் சற்று விளையாட்டை குறைத்து அதன் வீரியத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருந்தால் "ராஜபாட்டை", "ரசிக்கும் பாட்டை"யாக இருந்திருக்கும்!



Bookmark and Share
Share and Enjoy:
விளம்பரங்கள்
திரைப்படங்கள்
பிந்திய செய்திகள்
Compare hotel prices and find the best deal - HotelsCombined.com
HP Download StoreCompUSA
Powered By:- Blogger