பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் மரமுந்திரிகை கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.இந்த தகவலை இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் ரி டி நிதர்ஷன் வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5முதல் 10கன்றுகள் வரை வழங்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களிலே அதிகளவிலான மரமுந்திரிகை பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடதக்கது.