Unlimited Music, Everywhere. Try Rdio for Free.
ooVoo LLC
பிரதான செய்திகள்
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்


























சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்



























பெண்களுக்காக

பாதுகாப்பான Password ஐ அமைக்க சில வழிமுறைகள்!

அனைவருக்கும் வணக்கம்! உங்கள் ஊரில் இடம்பெறும் சமய,கலாசார நிகழ்வுகள் மற்றும் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி- vettiinayam@hotmail.com, ஸ்கைப் முகவரி:- Vetti.Inayam
Banner

இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது.

இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப வசதிகளோடு நாம் வாழவேண்டிய கட்டாயச்சூழல் இது. ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதற்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச்சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்காந்து சாப்பிடுவன் யாரோ என்று நம் கதை வராமல் பார்ப்பது  நம் கையில்த்தான் உள்ளது. 

நமது கடவுச்சொல் திருடுபோவது நமது கையில்தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்? எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef   இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .

இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும்போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக்கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம்.

ஸ்பைவேர்,மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு.எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை.மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை ஜிமெயில் யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும்போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள்.அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :-   ! . , * - + `~ @ # $ % ^ & ( ) _ = : ; \ /  போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.

Bookmark and Share
Share and Enjoy:
விளம்பரங்கள்
திரைப்படங்கள்
பிந்திய செய்திகள்
Compare hotel prices and find the best deal - HotelsCombined.com
HP Download StoreCompUSA
Powered By:- Blogger