

இந்த தொழிநுட்பத்தின் மூலம் தெளிவாகவும்,விரைவாகவும் சேவையை பெறுவதற்கு நிச்சயமாக 3G தொழிநுட்பத்துடன் கூடிய கைத்தொலைபேசி இன்றியமையாதது.இவ் மென்பொருளானது Nimbuzz என அழைக்கப்படுகின்றது.இச் சேவையை பயன்படுத்தும் போது மறுமுனையில் இருப்பவர் இவ் மென்பொருளை தனது கைத்தொலைபேசியில் தரவிறக்கியிருக்க வேண்டியது இன்றியமையாதது.
இனி எவ்வாறு இவ் மென்பொருளை பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
முதலில் இந்த தளத்திற்கு சென்றுகணக்கொன்றை ஆரம்பித்து நிம்பஸ் மென்பொருளை உங்கள்கைத்தொலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள் (நிறுவ முன்கைத்தொலைபேசியின் மொடல் இலக்கத்தை சரியாக தெரிவுசெய்துகொள்ளவும்) நிறுவும்போது மெமரி கார்டில் இடம் குறைவாகஇருந்தால் கைத்தொலைபேசியின் Games பகுதியில் நிறுவலாம்.
பின்னர் திறந்ததும் உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லால்உள்நுழைந்து Google talk, Yahoo, Skpe, MSN/Windows live messenger மற்றும், Facebook ஊடாக உலகெங்கும் இலவசமாக பேசி மகிழலாம் இது போல அதனில் கொடுக்கப்பட்டுள்ள SIP ஒப்சன் ஊடாக voip முறை அழைப்புகளையும் ஏற்படுத்தமுடியும்