வீரய்யா திரைப்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு! (Video இணைப்பு)
சனி, 21 ஏப்ரல், 2012|
வெற்றி இணையம்
கொலிவுட்டில் சிவம் அசோசியேட்ஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவர உள்ள 'வீரய்யா' திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.மகளிர் விடுதியில் ஒரு பெண்ணை கற்பழித்த ரௌடியை என்கவுண்டரில் பொலிஸ் அதிகாரி ஷாம் சுட்டுத் தள்ளுகிறார்.இதனால் நாயகன் ஷாமின் குழந்தைகளை கொன்று விடுவதாக வில்லன் மிரட்டல் விடுக்கிறான். ஷாமின் குடும்பத்தைக் காப்பாற்ற ரவி தேஜா அனுப்பப்படுகிறார்.
ரவி தேஜாவுக்கும் வில்லனுக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் இறுதிக்காட்சியில் தெரிய வரும்.இதில் நாயகன் ஷாம் மற்றும் ரவி தேஜா இருவருடனும் காஜல் அகர்வால், டாப்சி, ரோஜா, ஸ்ரீதேவி விஜயகுமார், நாசர், சரண் ராஜ், பிரதீப் ராவத் என பலரும் நடித்துள்ளார்கள்.
டாப்சி ஆடும் பாடல் காட்சி, கார் சேசிங் காட்சி ஆகியவை படத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.விரைவில் திரைக்கு வரவுள்ள வீரய்யா திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.