உலக சாதனைகள் என்றாலும் அவை என்றோ ஒருநாள் முறியடிக்கப்படக் கூடியவையே. அதற்கிணங்க சீன் ஹென்னடி என்ற 29 வயது கார்ப்பந்தய வீரர் அசுர வேகத்தில் காரைச் செலுத்தி உலக சாதனையை முறியடித்துள்ளார்.
இம்முயற்சியை டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கொண்ட ஹென்னடி சுமார் மணிக்கு 257 மைல் வேகத்தில் காரைச் செலுத்தி முந்தைய சாதனையான மணிக்கு 250 மைல் என்ற சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.