

பில்லா-2 படத்தில் 'தல' அஜித்துடன் இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் அழகி பார்வதி ஓமனக்குட்டன், அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார்.கேரள மாநிலம் கோட்டயத்தை பிறப்பிடமாக கொண்ட பார்வதி ஓமனக்குட்டன், 2008ம் ஆண்டு மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்டு அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.தமிழில் பில்லா-2 முதல் படமாகும். இயக்குனர் ஷக்ரி டோலட்டி, ஓமனக்குட்டன் இப்படத்திற்கு பொருத்தமாக இருப்பார் எனக் கருதி தெரிவு செய்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பில்லா-2 படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதற்காக அஜித், படக்குழுவினர் அனைவருக்கும் விருந்து வைத்தார். இவ்விருந்தில் பார்வதியும் கலந்து கொண்டார்.இவ்விருந்தைப்பற்றியும் அஜித்தைப் பற்றியும் ஓமனக்குட்டன் ஊடகத்தினரிடம் கூறியதாவது, அஜித் குமார் ஒரு நடிகர் மட்டுமல்ல, நல்ல சமையல் காரர்.
அஜித்தைப் போல அருமையாக, ருசியாக சமைத்து போடும் சமையல் கலைஞரை நான் பார்த்ததில்லை.அவர் சமைத்த உணவுகள் அனைத்தும் நன்கு பிடித்தது என்று பேட்டியளித்துள்ளார்.