

அமெரிக்காவின் பிளாக் ஹாவ்க் எனும் விசேட அதிரடிப் படையினருடன் பயணம் செய்த ஹெலிகாப்டர் ஒன்று நேற்று வியாழக்கிழமை, தெற்கு ஆப்கானிஸ்தானில் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 4 வீரர்களும் பலியாகியுள்ளதாக அமெரிக்க இராணுவ புலனாய்வு மையமான பென்டகன் அறிவித்துள்ளது.
மோசமான வானநிலை காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக முன்னர் அமெரிக்க தரப்பு தெரிவித்த போதும் ஹெலிகாப்டரை தாமே சுட்டுவீழ்த்தியதாக தற்போது தலிபான்கள் அறிவித்துள்ளனர்.இந்த ஹெலிகாப்டரை கைப்பற்றுவதற்காக இராணுவத் தளத்தில் காத்துக் கொண்டிருந்த மற்றைய படையினர் இவ்விபத்து நிகழ்ந்ததை நேரிடயாகப் பார்த்துள்ளனர். மேலும் விபத்துக்கு உள்ளான ஹெலியின் அருகில் பயணித்த மற்றுமொரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக குறித்த இடத்தை சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் அடிக்கடி இத்தகைய ஹெலி காப்டர் விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச்சில் ஆப்கான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இதே போன்றே நிகழ்ந்த விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.