பசுவைத் திருமணம் செய்யும் மூட நம்பிக்கையுள்ள மலையாளி! (Video இணைப்பு)
செவ்வாய், 6 மார்ச், 2012|
வெற்றி இணையம்
விரைவில் திருமணம் செய்ய இருக்கின்ற நபர் ஒருவரைப் பற்றிய செய்தி இது.இந்தியாவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்த இளைஞன். மணப் பெண்ணை தெரிவு செய்கின்ற நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கின்றார்.ஆனால் அதிர்ச்சித் தகவல் என்ன தெரியுமா?
இவர் ஒரு பசுவைத் திருமணம் செய்ய உள்ளார் என்பதுதான்.காரணம் என்ன?இவருக்கு வயது 31 ஆகின்றது. ஆனால் வந்து சேர்க்கின்ற திருமண ஆலோசனைகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் குழம்பிப் போகின்றன.ஜாதகத்தை சோதிட நிபுணர்களிடம் கொண்டு போய் பலன் கேட்டு இருக்கின்றார்.
பசு ஒன்றை திருமணம் செய்கின்ற பட்சத்தில் தோஷங்கள் நீங்கப் பெற்று மனிதப் பெண்ணை கலியாணம் செய்கின்ற பாக்கியம் கிடைக்கப் பெறும் என்று ஜோதிடர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.இது போன்ற விடயங்களை நம்பித்தான் ஆக வேண்டும் என்று கூறுகின்றார் இளைஞன்.