

கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் இருந்து தெற்கு சூடான் பிரிந்து தனி நாடாக உதயமானது. இதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இருநாட்டின் எல்லையில் ஹெக்லிக் என்ற இடத்தில் எண்ணை கிணறு உள்ளது.இதற்கு இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் தான் மோதல் ஏற்பட்டது. தெற்கு சூடான் நாட்டின் 98 சதவீதம் வருமானம் எண்ணை கிணறுகளை நம்பி உள்ளது.
இங்கு உற்பத்தியாகும் எண்ணையை சூடான் துறைமுகம் வழியாகத்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்காக குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து சூடான் இந்த குழய்களை மூடிவிட்டது.
இதனால் சூடான் மீது தெற்கு சூடான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக சூடான் ராணுவ விமானங்கள் தெற்கு சூடான் மீது சரமாரியாக குண்டு வீசின. இதில் ஏராளமானோர் பலியாகி இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே இருநாடுகளும் முழுபோரில் ஈடுபடலாம் என்ற பதட்டம் நிலவுகிறது. பதட்டத்தை தணிக்க ஆப்பரிக்க நாடுகள் யூனியன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.