

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 9 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. சிபீ கிண்ண முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதி லீக் போட்டி இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் மெல்போர்னில் நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 229 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பாக Shane Watson 65 ஓட்டங்களையும் David Hussey 74 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மலிங்க 4 விக்கெட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இன்றையபோட்டியின் ஆட்ட நாயகனாக சந்திமால் தெரிவு செய்யப்பட்டார்.