ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விளாடிமிர் புடின் 64 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.புடினின் வெற்றி மோசடியானது என்று கூறி அவரது எதிர்ப்பாளர்கள் மாஸ்கோவில் உள்ள புஷ்கின்ஸ்கயா சதுக்கத்தில் போராட்டம் நடத்தினர்.
20 ஆயிரம் பேர் வரை திரண்டு புடினுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அங்கு கலவர தடுப்பு பொலிசார் விரைந்தனர்.போராட்டம் நடத்த அனுமதி பெறவில்லை என்று கூறி அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் போராட்டகாரர்கள் கலைந்து செல்லாததால் பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர்.
மனித சங்கிலி போல அமைத்து போராட்டக்காரர்களை சதுக்கத்தில் இருந்து வெளியேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் செர்ஜி உள்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.