ரெட்புள் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்ட வீரரான கிறிஸ் பீஃவிஃவர் யாழ்ப்பாணத்தில் தனது சாகச நிகழ்வுகளை இன்று நிகழ்த்தினார்.யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்துக்கு முன்னால் இன்று பிற்பகல் இந் நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வினைக் கண்டுகளிப்பதற்கென பெருந்திரளான மக்கள் அங்கு வருகை தந்தனர்.
மேலும் அவர்கள் கிறிஸ் பீஃவிஃவரின் மோட்டார் சைக்கிள் சாகசங்களுக்கு கைதட்டி உற்சாகமளித்தனர்.கிறிஸ் பீஃவிஃவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் தனது சாகச நிகழ்வுகளை முன்னெடுக்கின்றார்.
இதேவேளை இவரின் மேலும் இரண்டு சாகச நிகழ்வுகள் எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பு தாமரை தடாக மாவத்தை (கிறீன்பாத்) மற்றும் டபிள்யுடீசி (பிஓசி வீதி) இலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.இச் சகாச நிகவுகளை கண்டுகளிப்பதற்கான அனுமதி இலவசமென்பது குறிப்பிடத்தக்கது.