சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணை நேற்று ராஜஸ்தானில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்திய-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளில் ஒன்றாகும்.
மேலும், 290 கி.மீ. தொலைவில் சென்று இலக்கினை துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்ததாகும்.இந்நிலையில் ராஜஸ்தானின் பொக்ரான் நகரில் உள்ள ஜெய்சல்மார், ராணுவ ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ராணுவத்துணை தளபதி ஸ்ரீகிருஷ்ணா சிங், ராணுவ இயக்குனர் ஜெனரல் ஏ.கே.செளத்ரி உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.