

முதலில், உங்களின் சருமத்தின் தன்மையை தெரிந்து, அதற்கேற்ற, பொருத்தமான சவர்க்காரத்தை பயன்படுத்த வேண்டும்.எண்ணெய் பசை உள்ள சருமம் மற்றும் பருக்கள் உள்ள சருமத்திற்கு, கிளிசரின் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த சவர்க்காரத்தை பயன்படுத்தலாம். குளிர் காலத்தில்,moisture அதிகமுள்ள சவர்க்காரத்தையும்,வெயில் நாட்களில்,எலுமிச்சை கலந்த சோப்பையும் பயன்படுத்தலாம்.
அதிக வாசனை உள்ள சவர்க்காரங்கள் தரமானவை என்று அர்த்தமல்ல.ரசாயனப் பொருட்களின் நிறத்தை மறைக்க கொழுப்பின் வாசனையை தவிர்க்கவே அதிக மணமும் நிறமும் சேர்க்கப்படுகிறது. எனவே, மிதமான வாசனை உள்ள சவர்க்காரமே சருமத்துக்கு நல்லது.
அடிக்கடி சவர்க்காரத்தை மாற்றாதீர்கள். அப்படி மாற்றுவதால், புதிய சவர்க்காரங்கள், அலர்ஜியை ஏற்படுத்தலாம். தினமும், இரண்டு முறை சவர்க்காரம் போட்டு முகம் கழுவினால் போதும். அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தினால், சருமம் வறண்டு போகச் செய்யும்.
எந்த சவர்க்காரமுமே ஒத்துக் கொள்ளாதவர்கள், கடலை மாவு அல்லது பயத்தம் மாவுடன், பாலாடை, மஞ்சள், சந்தனம் கலந்து உபயோகிக்கலாம். மூலிகைகள் அடங்கிய குளியல் பொடிகளை பயன்படுத்தலாம்.