டைட்டானிக் திரைப்படம் 3D பரிமாணத்தில் மீண்டும் ஏப்ரல் 5ம் திகதி திரைக்கு வர உள்ளது.கடந்த 1912ம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற பயணிகள் கப்பலான டைட்டானிக் பனிப்பாறையில் மோதி விபத்திற்குள்ளாது.இந்த சம்பவத்தை மையமாக கொண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ்கெமரூன் 1997ம் வருடம் டைட்டானிக் என்ற படத்தை எடுத்தார்.
இப்படத்தில் நாயகனாக லியானர்டோ டீ காப்ரீயோ, நாயகியாக கேத் வின்ஸ்லெட் நடித்திருந்தனர்.உலகம் முழுவதும் இமாலய வெற்றியடைந்தது கெமரூனின் டைட்டானிக். இப்படத்திற்காக ஜேம்ஸ் கெமரூன் ஓஸ்கர் விருதும் பெற்றார்.
இந்நிலையில் டைட்டானிக் படம் மீண்டும் 3D பரிமாணத்தில் ஏப்ரல் 5ம் திகதி திரைக்கு வருகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.இப்படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவில் டைட்டானிக் தயாரிப்பாளர் ஜான் லேண்டோ, ஜேம்ஸ் கெமரூன் ஆகியோர் கலந்துகொண்டனர்.