

இயக்குநர் ஷங்கரின் நண்பன் படம் மூலம் உச்சத்தை தொட்ட நடிகர் சத்யன் மீண்டும், விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.வைகைப்புயலின் அரசியல் ஆவேசம், ஆபாச காமெடி நடிகரின் தொடர் சறுக்கல், சந்தன நடிகரின் தொடர் பிஸி கால்ஷீட் போன்ற காரணத்தால், சத்யனுக்கு அடித்தது லக். நண்பன் படத்தில் சைலன்சர் ரோலில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உடன் அடித்த லூட்டிகள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. இந்தபடத்தின் வெற்றி, சத்யனை மேலும் ஒரு படி மேலே கொண்டு போய்விட்டது. இவர் இப்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பாக்கியில் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறார்.
மும்பையில் நடக்கும் துப்பாக்கி சூட்டிங்கிற்காக 55 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் சத்யன். கிட்டத்தட்ட படம் முழுக்க விஜய்யுடன் சேர்ந்து வருகிறாராம் சத்யன், இதனால் வேறு எந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுக்காமல் துப்பாக்கி படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
துப்பாக்கியில் சத்யனுக்கு வெறும் காமெடி ரோல் மட்டும் இல்லாமல் ஒரு நல்ல கேரக்டரும் கொடுத்து இருக்கிறாராம் இயக்குநர். இதனால் ரொம்பவே உற்சாகமாக இருக்கும் சத்யன், நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், அவசரப்படாமல் ஒவ்வொரு படமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறாராம்.
