பொலிஸ் கரக்டரில் நடிப்பது தமிழ் ஹீரோக்கள் விரும்பும் புரமோஷன்.சிம்புவிற்கு அந்த வாய்ப்பை இந்தியில் சக்கைபோடு போட்ட தபாங் கொடுத்திருக்கிறது.ரேவதியின் மகன் சிம்பு. கணவர் இறந்துவிடுவதால் ரேவதி, நாசரை மறுமணம் செய்துகொள்கிறார்.இவர்களுக்குப் பிறக்கும் மகன் "ஜித்தன் ரமேஷ்.புத்தியுள்ள பிள்ளையான சிம்பு இன்ஸ்பெக்டர் ஆகிறார். விளையாட்டுப்பிள்ளை ரமேஷ் எண்ணெய் மில்லில் அப்பாவுக்கு எடுபிடி ஆகிறார்.ஒருபக்கம் தம்பியோடு சண்டை, இன்னொருபக்கம் தேர்தலில் நிற்கும் கிரிமினல் சோனுவுடன் மோதல் என சிம்பு பண்ணும் இரட்டைக் குதிரை சவாரிதான் ஒஸ்தி.
சிக்ஸ்பாக் உடம்பு, திருநெல்வேலி தெனாவெட்டு என பொலிஸ் கரக்டருக்கு சிம்பு நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.சிம்பு அடிக்கடித் தனக்குத் தானே கொடுத்துக்கொள்ளும் பில்டப்தான் எரிச்சலைக் கிளப்புகிறது.என்னதான் எகிறி அடித்தாலும் ஓங்கிப் பேசினாலும் காக்கிச்சட்டைக் கெட்டப் சிம்புவுக்கு டூமச்தான்.சேட்டு வீட்டுக் கல்யாண ஊர்வலத்துக்கு வந்த பெண் போலிருக்கும் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்யாயாவுக்கு பானை செய்யும் ஏழைப்பெண் கேரக்டர். பொலிஸ் கதையில் பொலிஸ் ஸ்டேஷனை விட அடிக்கடி காட்டப்படும் இடம் ரிச்சாவின் வழவழ இடுப்புதான்.
படத்தில் எதிர்பாராத ஆச்சரியம், ஜித்தன் ரமேஷின் துள்ளலான நடிப்பு.கான்ஸ்டபிள் சந்தானம் தன் கூட்டாளிகளை எப்போதும் அதட்டிக்கொண்டே இருக்கிறார்.இரு மகன்களிடமும் அல்லல்படும் அம்மாவாக வரும் ரேவதியிடம் சீனியரின் பக்குவம்.இசையமைப்பாளர் தமனின் பாடல்களில் மசாலா சப்ஜெக்ட்டுக்கேற்ற பாஸ்ட்ஃபுட் மியூசிக். டி.ஆர். குரலில் ஒலிக்கும் மாமே ஒஸ்தி மாமே ஹம்மிங் முணுமுணுக்க வைக்கிறது.
சமூக விரோதிகளிடம் பறித்த பணத்தை சிம்பு வீட்டில் பதுக்கிவைப்பது பொலிஸ் படையுடன் போய் தம்பியின் திருமணத்தை நிறுத்துவது என்ன நடந்தால் எனக்கென்ன? என்ற எக்ஸ்ப்ரஷன்களுடனேயே ரிச்சா வலம்வருவது என படத்தில் பல பூச்சுற்றல்கள் லொஜிக் இடறல்கள்.இயக்குநர் தரணியை இதற்குப் பொறுப்பாக முடியாது.ஒரிஜினலான தபாங்கில் அப்படித்தானே இருக்கிறது?