சுவிஸ் இன்டர்நேஷனல் எயாலைன்ஸ் நிறுவனம் 2011ம் ஆண்டில் 15 மில்லியன் பேரை விமானத்தில் ஏற்றிச்சென்று புதிய சாதனை புரிந்துள்ளது.இந்நிறுவனம் ஜேர்மனியின் லுப்தான்சாவின் ஆதரவில் இயங்குகிறது.இதற்கு முந்தைய வருடமான 2010ம் ஆண்டில் 14.17 மில்லியன் பயணிகளை ஏற்றிச்சென்று சாதனை படைத்தது.
பத்தாண்டுகளுக்கு முன்பு சுவிஸ் எயார் என்ற விமானசேவை பலத்த நஷ்டத்தில் இயங்கியதாலும், பெருத்த கடனில் மூழ்கியதாலும் நிறுத்தப்பட்டது.இதன் பின்பு ஜேர்மனியின் லுப்தான்சா சுவிஸ் நாட்டிற்கு விமான சேவையை வழங்க முன்வந்தது.இந்தப் புதிய சேவையின் மூலமாக தனது நிதி நெருக்கடியையும் சமாளித்தது எரிபொருள் விலை உயர்வை எதிர்கொண்டது.
மேலும் நல்ல லாபத்தையும் ஈட்டியது. இந்நிறுவனத்தில் 7521 பேர் உலகளவில் பணிபுரிகின்றனர். அடுத்த ஆண்டு முதல் இன்னும் 81 விமானங்கள் வாங்கப்பட்டு சேவை விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.