2011 இன் 'Top Song' ஆக யூடியூப்பில் 40 மில்லியனுக்கு மேல் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது '3' திரைப்படத்துக்காக தனுஷ் பாடிய 'why this கொல வெறி' பாடல்.2011 இன் மிக பிரபல்யமான யூடியூப் பாடலாக தெரிவாகியிருப்பது ஜஸ்டின் ஃபீபரின் பாடலோ அல்லது ஏற்கனவே தெரிந்த பாடகர்களுடைய பாடல்களோ அல்ல.
இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாத ஒரு பாடல் என வர்ணிக்கிறார் சி.என்.என் இன் அலி வெல்ஷி. இதன் ஒரிஜினல் பாடலை யூடியூப்பில் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 28 மில்லியனை கடந்துள்ளதாம்.யூடியூப் Searching Box (தேடுதல் கட்டத்தில்) இல் வெறுமனே நீங்கள் Why என்று மட்டும் டைப் செய்தாலே, இப்பாடல் தான் காட்டுகிறதாம்.
நூற்றுக்கு மேற்பட்ட இப்பாடலின் இமிடேஷன்கள் மற்றும் நியூசிலாந்து தெருக்களிலும் இப்பாடலுக்கு நடனமாடப்படும் ஃபிளாஷ் மாப் என இப்பாடல் மேலும் பிரபலம் ஆகிவருகிறது.கவனமாக வாகனம் ஓட்டுங்கள். ஹெல்மெட் அணியுங்கள் என இந்திய தெருக்களில் விளம்பர பலகைகளுக்கும் இந்த பாடல் வரிகளை பயன்படுத்த தொடங்கியிருக்கிரார்கள் என ஹிட்ஸுக்கு உதாரணமும் காட்டுகிறார் அலி வெல்ஷி.