


நயன்தாரா கடைசியாக நடித்த தெலுங்குப் படமான ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் இன்று திரைக்கு வருகிறது. இது ஒரு புராணப் படமாகும். ராமன் கதையைக் கூறும் படம். இதில் ராமராக என்டிஆர் பாலகிருஷ்ணாவும், சீதையாக நயனதாராவும் நடித்துள்ளனர். ரூ. 45 கோடியில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா சீதா தேவியாக நடிக்க ஒப்புக் கொண்டபோதுதான் அவருக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மூண்டது. அப்போது ரமலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் பிரபுதேவா. இதையடுத்து இந்து அமைப்புகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நயனதாரா சீதாப் பிராட்டி வேடத்தில் நடிப்பதா என்று போராட்டங்களையும் நடத்தினர்.
இருப்பினும் அதையும் மீறி பாலகிருஷ்ணா, நயனதாராவை தனது படத்தில் நடிக்க வைத்தார். இந்தப் பின்னணியில் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ஆந்திராவிலும், சென்னையிலும் திரைக்கு வருகிறது. இப்படத்துக்கு பிறகு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை நயன்தாரா ஏற்கவில்லையாம்.
இப்படத்திற்கு பிறகு தனது திருமண அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் நயன்தாரா. மேலும் அவர் நடிப்பிலிருந்து விலகுவது பற்றியும் தனது திருமணம் பற்றியும் அறிவிப்பார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



